Tuesday, July 31, 2018

பகுதி 27 - கர்ணனை ஏமாற்றிய கிருஷ்னன் - போர்க்கு தயாராகுங்கள் - இதுதான்....மகாபாரத...கதை

போர்ல தோத்துட்டமே னு துரியோதனன் செம காண்டுல இருக்கான். பாண்டவங்க போர்ல ஹெல்ப் பண்ணுனதால விராடன்மன்னன், பாண்டவங்கள அவன் கூடயே தங்கவச்சிட்டான். பாண்டவங்க விராடன் நாட்டுல தான் இருக்குறங்க னு நியூஸ் தெரிஞ்ச கண்ணன், பலராமன், சுமித்திரை, அவ மகன் அபிமன்யு எல்லாம் விராடன்நாட்டுக்கு பாண்டவங்க பாக்க வாராணுக.

மறுபக்கம் துருபத நாட்டுல இருந்து திஷ்டதூமன், சிகண்டி பாண்டவங்கல பாக்க வாராணுக.

விராடன் அரண்மனைல போருக்கான முடிவு எடுக்க எல்லாம் உக்காந்துருக்காங்க. அதுல கண்ணன் எந்துச்சி "எல்லாம் நல்லா கேட்டுக்கோங்கப்பா.. இங்க இருக்குற பாண்டவங்கல துரியோதனன் செஸ் போட்டி நடத்தி, இவனுக நாட்டை புடிக்கிட்டான். அதுமட்டுமில்லாம 14 வருசம் வனவாசம் அனுப்பிட்டாங்க. இப்ப வனவாசமும் முடிஞ்சது. அவனுகளுக்கு சேர வேண்டிய சொத்த கொடுக்குறதுதான் முறை. அதுக்காக நாம எல்லோரும் பாண்டவங்களுக்கு சப்போட்டா போர்க்கு போவோம்"னு சொல்றான்.

கண்ணன் முறைதவறி பேசுறான் னு பலராமன் எந்திக்கான் "கண்ணன் சொல்ற மாதிரி கேட்டா, நாம போர்ல சாகுறது உறுதி. எப்போ பாண்டவங்க செஸ் விளையான்டு நாட்ட தோத்தானுகளோ அப்பவே அந்த நாடு துரியோதனனுக்கு சொந்தமாயிரிச்சி. இந்த பாண்டவங்க அஸ்தினாபுரத்தில தங்கலாமே ஒழிய சொத்த திருப்பி கேக்ககூடாது னு ஒரு ரூல்ஸ் இருக்குய்யா. எல்லாம் ரூல்ஸ பாலோ பண்ணுங்கப்பா"னு சொல்லிட்டி உக்காருறான்.

அதுக்கு விராடன் "பலராமன் சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்கு. நாமவேணா கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானத்த பண்ணிவப்போம். இங்க இருக்குற எங்க நாட்டு தூதுவன அனுப்பி துரியோதனன்கிட்ட சமாதானம் பேசவிடுவோம்"னு சொல்றான். அதுக்கு கண்ணன் "இதுவும் நல்ல யோசனை தான்.. சட்டுப்புட்டுனு ஆகவேண்டிய காரியத்த பாருங்க.."னு சொல்லிட்டு அவன் நாட்டுக்கு கிளம்பிருறான்.

துரியோதனன் சமாதானம் பேச வந்த தூதுவன்கிட்ட "டே.. அந்த பாண்டவ பயலுககிட்ட சொல்லிரு... இங்க எவனாவது சமாதானம் மயிருனு வந்தா பாஞ்சாலி முண்டச்சியா தான் அலையுவானு" னு சொல்லி தூதுவன அனுப்பிருறான்.

அந்த டயம் மாத்ரி அண்ணன் சல்லியன் ஒரு படையோட வந்து பாண்டவங்கனு நெனைச்சி துரியோதனன் கூட சேந்துருறான்.

இன்னும் போர்க்கு ஆள் வேணுமே னு துரியோதனன் கண்ணன பாக்க, துவாரகைக்கு போறான். அந்த டயம் கண்ணன் தூங்கிட்டு இருக்கான். இதே மாதிரி கண்ணன்கிட்ட ஹெல்ப் கேக்க அர்ஜுனனும் அங்க வாரான். "ரெண்டு பேரும் ஹெல்ப் கேட்டா என்னடா பண்றது" யோச்சிச்ச கண்ணன். "உனக்கு நான் வேணுமா? என் படை வேணுமா?"னு அர்ஜுனன்கிட்ட கேக்கான். அதுக்கு அர்ஜுனன் "எனக்கு நீ மட்டும் போதும்"னு சொல்றான். துரியோதனனுக்கு தன்னோட நாட்டு படையகள கொடுத்துட்டான்.

பீஷ்மருக்கு துரியோதனன் போர் நடத்தபோறது புடிக்கல. அவன கூப்புட்டு கண்டிச்சியும் அவன் கேக்குறதா இல்ல.

பாண்டவசங்க சைடு, போர் வேண்டாம் சமாதானமா போயிறலாம் னு  பலராமன் கண்ணன்கிட்ட எடுத்து சொல்ல. அதுக்கு சரி னு சொன்ன கண்ணன் "இந்த டயம் நானே சமாதானம் பேசப்போறேன்"னு அஸ்தினாபுரத்துக்கு போறான்.

அங்க பீஷ்மர் பஞ்சாயத்த கூட்ட, கண்ணன் பேசுறான் "பாண்டவங்க போருக்கு எப்பவும் தயராத்தான் இருக்காணுக. இருந்தாலும் சமாதானமா போறது நல்லது னு சொல்றானுக. அவங்களுக்கு பாதி நாட்ட குடுத்து, நீங்களும் சமாதானமா போங்க"னு சொல்றான்.

இத கேட்டு கோவமான துரியோதனன் "இந்த கண்ணன் கண்டாரவோழி, எப்ப பாத்தாலும் பாண்டவனுகளுக்கே சப்போர்ட்டா பேசிட்டுருக்கான். ஏய்.. வாசலுல நிக்கிற காவக்காரங்களா... இந்த கண்ணன் பயல புடிச்சி அந்த தூணுல கட்டுங்கடா.! இவனுக்கு செமத்தயா கொடுத்து அனுப்புனாத்தான், இவன் இங்கிட்டும் அங்குட்டும் கோள்மூட்டி விடுறத விடுவான்"னு சொல்றான்.

எதை கேட்ட கோவமான கண்ணன் "டே.. துரியோதனனா... என்னையே புடிச்சி கட்ட சொல்றயா..? நான் யாருன்னு தெரியுமாடா"னு அவனோட சைஸ, கிங்காங் சைஸ்க்கு பெருசாக்கி, கிருஷ்ணன் வேசத்துல நிக்கான். இத பெருசுக பீஷ்மர், திருதராஷ்டிரன் கிருஷ்ணன கும்புடுராணுக. அப்றம் கிருஷ்ணன் துரியோதனன பாத்து "போர் நடக்குறதும் உறுதி, நீ சாகுறது உறுதி"னு சொல்லிட்டு கெளம்பிருறான்.

அந்த டயம் கர்ணன் துரியோதனன பாத்து "இவனுக ஒரு எச்ச கூட்டம் நண்பா. உனக்கு நான் இருக்கேன். நம்மதான் போர்ல வின் பண்ணுவோம்.."னு சொல்றான். அத கேட்ட துரியோதனன் "நண்பேன்டா.."னு கர்ணன கட்டிபுடிக்குறான்.

பாண்டவங்க போர்க்கு தயாராகும் போது கண்ணன் பாண்டவங்கள பாத்து சொல்றான் "டே.. பாண்டவங்களா.. நீங்க என்னதான் சண்ட போட்டாலும், இந்த துரியோதனன செயிக்க முடியாது.. அவங்க சைடு கர்ணன் இருக்கான். அவன் கழுத்துல கவகுண்டலம் இருக்குற வரைக்கு நீங்க அவங்க பக்கத்துல நெருங்க முடியாது"னு சொல்றான்.

அதுக்கு அர்ஜுனன் "என்கிட்ட சிவன் குடுத்த பவரான குச்சி இருக்கு அத வச்சி கர்ணன கொள்ளுவேன்"னு சொல்றான். அதுக்கு கிருஷ்னன் "அப்போ அவன் உன்னத்தான் பஸ்ட் சோலிய முடிப்பான்"னு சொல்றான்.

இப்ப நாங்க என்ன செயுறது னு பாண்டவங்க கேக்க.. கிருஷ்ணன் சொல்றான் "அவன சூழ்ச்சியாலதான் கொல்லமுடியும். அத நான் பாத்துகிறேன்"னு சொல்லிட்டு கெளம்புறான்.

அஸ்தினாபுரத்தில கர்ணன் தனியா இருக்குற நேரமா பாத்து கிருஷ்னன் ஒரு கிழட்டு முனிவர் வேசம்போட்டு கர்ணன்கிட்ட போறான். "நீ தான் கர்ணனா.. நீ தானமா எத கேட்டாலும் குடுத்துருவியாமே.."னு கேக்கான்..

முனிவன பாத்த கர்ணன்... முனிவன் சோத்துக்கு தான் வந்துருப்பானு நினைச்சிட்டு "அன்னதானமா... அது பின்னாடி சைடு போடுறாங்க, போயி சாப்ட்டு கெளம்பு."னு சொல்றான். கோவமான கிருஷ்ணன் "சோத்துக்கு வரலடா.. எனக்கு தானம் பண்ணு"னு சோறான்.

தானம் கேக்குறவன் அரட்டி கேக்கனே..ட்டு "என்ன தானம்டா வேணும்"னு கேக்குறான். அதுக்கு கிருஷ்னன் "உன்னோட கழுத்துல இருக்குற சங்கிலிய தானமா குடு"னு கேக்குறான். கிழவன ஏறயிரங்க பார்த்துட்டு "யோவ்.. இது சங்கிலி இல்ல.. கவசகுண்டலம்.. கழுத்தோட பிஸ்க்சடு.. இத கழட்ட முடியாது"னு சொல்றான். "என்னோமோ நீ தானம் கொடுக்குறதுல பெரிய வள்ளல் னு சொன்னாங்க.. நீ முடியாது சொல்ற"னு கிருஷ்ணன் சொல்ல, அதுக்கு கர்ணன் "இந்தா நாயே.. தூக்கிட்டு ஓடிப்போ.. னு கவசகுண்டலத்த பிச்சி எரியுறான்." கிருஷ்ணன் னு வாங்கிட்டு போயிருறான். குடுத்து விட்டாபிறக்குதான் யோசிக்கான் "அந்த கவசகுண்டலம் நம்ம கழுத்துல இல்லனா நம்ம உயிருக்கு கேரண்டி கிடையாதே"னு.

கவசகுண்டலத்த வாங்கிட்டு பாண்டவங்ககிட்ட வரான் கிருஷ்ணன். குண்டலத்த பாத்த பாண்டவங்க "செம கிருஸ்ணா.. இனி நாங்க கர்ணன சுலபமா சோழிய முடிச்சிறலாம்"னு சொல்றாங்க. அதுக்கு கிருஷ்ணன் "அவன கொல்றது அவ்வளவு ஈஸி இல்ல, உங்கள மாதிரி 50 பேர் வந்தாலும் அடிப்பான். அதுக்கு நான் வேற ஐடியா. வச்சிருக்கேன்"னு குந்திய பாக்க போறான்.

- தொடரும்...

No comments:

Post a Comment