Tuesday, July 31, 2018

சுய ஆட்சியே வேண்டும் - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் - தொடர் 7

ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது.

நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது.

இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.

அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவன் மன்னராக இருந்தான். இவன் இந்து. மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.

1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.

தொடரும்..

No comments:

Post a Comment