Tuesday, July 31, 2018

பகுதி 25 - பாஞ்சாலிக்கு கிடைத்த அட்சயபாத்திரம் - இதுதான்...மகாபாரத....கதை

பாண்டவர்களும் பாஞ்சாலியும் வனவாசத்துல எப்பிடி கஷ்டப்படுறாங்க னு அத பாத்து சந்தோச பட துரியோதனன் அந்த காட்டுக்கு போறான். பார்டர தாண்டுணதால அவனோட எதிரி நாட்டு மன்னன், துரியோதனன புடிச்சி அந்த காட்டுக்குள்ள ஒரு மரத்துல கட்டிவச்சி அடிக்கான். இத கேள்விப்பட்ட தர்மன் "டே.. பீமா.. துரியோதனன எவனோ மரத்துல கட்டிவச்சி அடிக்குறான். அவன வேறவொருத்தன் கையால சாகக்கூடாது, அதனால நீ இப்ப அவன காப்பாத்து"னு சொல்றான்.

பீமனும் துரியோதனன காப்பாத்தி அவன் நாட்டுக்கு அனுப்பிவைக்கான். நாட்டுக்கு போன துரியோதனன் "கேவலம் இவனுக காப்பாத்தி நாம உயிர் வாளனுமா...? இவனுகள போட்டாதான் நாம நிம்மதியா இருக்கமுடியும்"னு யோச்சிட்டு இருக்கும் போது கோபத்துக்கு பேர் போன துர்வாசமுனிவர் துரியோதனன் அரண்மனைக்கு விருந்துக்கு வாரான்.

துரியோதனனும் முனிவனுக்கு விருந்து வச்சி நல்லா பணிவிடை செயுறான். அப்போ துரியோதனனுக்கு ஒரு யோசனை வருது. பிளான போடுறேன். "முனிவர பாண்டவங்ககிட்ட விருந்துக்கு அனுப்புனா.. அவனுக முனிவர நல்லா கவனிக்க முடியாது. கோவதுல முனிவனும் அவனுகளுக்கு சாபம் விட்டுருவான். அவனுகளும் நாசமெத்து போவனுக" னு துரியோதனன் முனிவர் பாத்து " முனிவரே.. இமையமலை காட்டுபக்கம், பாண்டவங்க இருக்காங்க. அவங்ககிட்ட நீ விருந்துக்கு போனா உங்களுக்கு செமத்தயா செய்வானுக" னு சொல்றான். முனிவனும் சரிட்டு இமயமலைக்கு போறான்.

அதுக்கு முன்னாடியே தர்மன் தவம் பண்ணி ரிஷிங்ககிட்ட ஒரு அச்சயபாத்திரம்ங்கற ஒரு குண்டாசட்டிய வாங்கி பாஞ்சாலிட்ட குடுத்து வச்சிருக்கான். அந்த அட்சயகுண்டாசட்டில எவ்வளவு வேனுமானாலும் சோறு குழம்பு ஒரே டயமுல ரெடி ஆகும். அப்படி ஒரு ரெம்ப பவர்புல்லான மந்திரசட்டி அது. அதுலயும் ஒரு கண்டிசன் இருக்கு. சாப்பாட்ட ரெடி பண்ணி சாப்பிட்டு முடிசத்துக்கு அப்றம் அந்த சட்டிய கழிவி கவித்திட்டா, மறுபடியும் சோறு ரெடி பண்ணமுடியாது. அந்த மந்திரசட்டியோட பவர் அடுத்த நாள்தான் வேலசெய்யும்.

முனிவர் ஒரு படையோட வந்து பாண்டவங்க வீட்டுக்கு விருந்துக்கு வாறோம் னு தர்மன்ட்ட சொல்லி அனுப்பிட்டு ஆத்துக்கு குளிக்க போயிருறான். தரம்மனும் பாஞ்சாலிய கூப்பிட்டு "அடியே இன்னைக்கு துர்வாசமுனிவன் நம்ம வீட்டுக்கு சோறு திங்க வாரான். அவன் ரெம்ப கோவகாரன். நீ போயி அந்த மந்திர சட்டில நெறைய சாப்பாட்ட ரெடி பண்ணி எடுத்து வை"னு சொல்றான்.

அதுக்கு பாஞ்சாலி "என்னங்க.. நான் இப்பதான் சட்டிய கழுவி கவித்தி வச்சிட்டேன். அதுல சோறு நாளைக்குத்தான் ரெடியாகும். இப்ப என்னங்க பண்றது..?"னு தர்மன்ட்ட சொல்றா. அதுக்கு தரம்மன் "ஏன்டி அப்பிடி பண்ணுன.. முனிவன் வந்ததும் சோறு னு நிப்பான்டி.. நீ என்னமோ பண்ணி ரெடி பண்ணு"னு சொல்லிட்டு கெளம்பிருறான்.

பாஞ்சாலி என்ன பண்ணலானு முழிச்சிட்டு இருந்தப்போ ஒரு யோசனை வருது. உடனே கிருஷ்ணன நெனைக்கா. கிருஷ்ணனும் இவ முன்னாடி வந்து டொய்ங் னு நின்னுட்டு "என்ன பாஞ்சாலி ஏதும் குழந்த கிழந்த வேணுமா"னு கேக்கான். அதுக்கு பாஞ்சாலி "அதுஒன்னும் இப்ப வேண்டாம். நாங்க சாப்பாடு பண்ணுற மந்திரசட்டிய கழிவி கவித்தி வச்சிட்டேன். இந்த முனிவ பயவேற சோறு னு வந்து நிப்பான். எனக்கு சாப்பாடு பண்ண ஏதாவது ஹெல்ப் பண்ணு"னு சொல்றா.

அதுக்கு கிருஷ்ணன் "நீ உன்னோட சட்டிய இங்க எடுத்துட்டு வா பாஞ்சாலி"னு சொல்றான். அதுக்கு பாஞ்சாலி "அத நான் கழிவி கவித்திட்டேன். அதுல நாளைக்குத்தான் சோறு ரெடி பண்ணமுடியும்"னு சொல்றா. அதுக்கு கிருஷ்ணன் "சொல்றத பண்ணுடி"னு அனுப்புறான். அவளும் சட்டி எடுத்துட்டு வந்து கிருஷ்ணன்கிட்ட கொடுக்க. சட்டிய பாத்த கிருஷ்ணன், சட்டிக்குள்ள ஓரமா ஒரு சோத்து பருக்க ஒட்டிக்கிட்டு இருந்தத பாஞ்சாலிட்ட காட்டுறான்.

அத பாத்து குஷியான பாஞ்சாலி "எப்பிடி கிருஷ்னா இத கண்டுபிடிச்ச"னு கேக்குறா. அதுக்கு கிருஷ்ணன் "உன்னோட கழுவுமானம் தான் ஊருக்கே தெரியுமே"னு சொல்றான். அந்தநேரம் அங்க வந்த தர்மன் "சரியா சொன்னீரு கிருஸ்ணா... இவ எந்த சாமனையும் சரியா கழுவி வைக்கிறதில்ல. இப்ப உமக்கும் இந்த மேட்டர் தெரிஞ்சி போச்சா" னு சிரிக்கிறான்.

அப்போ கிருஷ்ணன், அந்த ஒட்டிக்கிட்டு கிடந்த ஒத்த சோத்து பருக்கையையும் எடுத்து சாப்புடுருறான். அத பாத்து கோவமான பாஞ்சாலி "உன்ன ஹெல்ப்க்கு கூப்பிட்டா.. இதையும் எடுத்து சாப்பிட்ட. இப்ப நான் எப்பிடி சோறு ரெடி பண்றது"னு கேக்கா.

அதுக்கு கிருஷ்ணன் "நான் சாப்டா.. அந்த முனிவங்க சாப்பிட்ட மாதிரி"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான். முனிவங்களுக்கும் வயிறு மந்தமா இருக்க. பாஞ்சாலி வீட்டுக்கு வந்த முனிவர் "இன்னைக்கு விருந்து கேன்சல்"னு சொல்லிட்டு கெளம்பிருறான்.

- தொடரும்...

No comments:

Post a Comment