Tuesday, July 31, 2018

பகுதி 24 - பாண்டவர்களின் வனவாசம் - அர்ஜுனன் செய்த தவம் - இதுதான்...மகாபாரத..கதை

பீஷ்மர் சொன்னத கேட்டு பாண்டவங்க 14 வருசம் வனவாசம் போறாங்க. போன இடத்துல பீமனுக்கும் தரம்மனுக்கும் எப்பவும் பிரச்சினையா வருது. எப்பவும் பாஞ்சாலி பீமன் கூடயே கெடக்கா. இந்த துரியோதனனயும், கர்ண பயலயும் எப்படியாவயது கொல்லனும் னு துடிச்ச அர்ஜுனன் "எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க.. நாம எப்பிடியாவது கௌரவரவர்கள போர் செஞ்சி வின் பண்ணனும். அதனால நான் என் வில்லுக்கு பவரான குச்சிக வாங்கறதுக்கு தனியா எங்கயாவது மலங்காட்டு சைடு போயி தவம் இருக்க போறேன். நான் திரும்பி வரவரைக்கும் நீங்க இங்கேயே இருங்க"னு சொல்றான். அதுக்கு பாண்டவங்களும், பாஞ்சாலியும் நல்லபடியா போயிட்டு ரெம்ப பவரான அம்பு குச்சிகளோட வாங்க னு வழியனுப்பி வைகுறாங்க.

அர்ஜுனன் காட்டுவழியா நடந்து இந்திரலீ மலைல போய் ஒரு கல்லுக்கு மேல சம்மணம் போட்டு உக்காந்து இந்திரன நினைச்சி தவம் பன்ரான். ரம்பா, ஊர்வசி, மேனகை னு ஒரே டயமுல மூனையும் ஓட்டுகிட்டு இருந்த இந்திரனுக்கு, அர்ஜுனனோட தவம் ரெம்ப டிஸ்டப் பண்ணிருக்கு "இந்த மாதிரி நேரத்துல எவண்டா என்னய நினைச்சி தவங்கிடக்குறது"னு இந்திரன் அர்ஜுனன் முன்னாடி டொயிங் னு போயி நிக்கான்.

அர்ஜுனன் இந்திரனுக்கு வணக்கம் வைக்கான். அதுக்கு இந்திரன் "யாருப்பா நீ... இந்த வேணாத வெயிலுல கல்லு மேல உக்காந்துருக்க"னு கேக்கான். அதுக்கு அர்ஜுனன் "சுவாமி.. உங்கட்ட இருந்து எனக்கு ஒரு வரம் வேணும்"னு சொல்றான். "அப்பிடி என்ன வரம்டா வேணும், சீக்கிரம் கேட்டுத்தொல, எனக்கு மூணு பேரு வெயிட்டிங்"னு சொல்றான்.

"சுவாமி.. என்னோட வில்லுக்கு ரெம்ப பவரான குச்சி வேணும்"னு சொல்றான். அதுக்கு இந்திரன் "இங்க பவரான குச்சிக ஏதும் சப்பளை பண்றமாதிரி இல்ல, உனக்கு பவரா வேணுமுனா நீ சிவன்ட்ட போயி கேளு.. அவன்தான் ரெம்ப பவரான குச்சிக வச்சியிருப்பான். போயி வாங்கிக்கோ''னு சொல்ரான். அதுக்கு அர்ஜுனன் "அப்பிடியே ஆகட்டும் சாமி"னு சொல்றான்.

"யார்ரா இவன்.. நல்லா போயிட்டு இருந்த நேரத்துல பவரான குச்சி வேணுமுன்னு, நம்ம குச்சி பவர இறக்கிப்புட்டான்"னு பொலம்பிக்கிட்டே "சரிடா  கெளம்புறேன்" சொல்லிட்டு மறைஞ்சிறுறான்.

அர்ஜுனன் இப்ப சிவன நெனைச்சி தவம் பன்ரான். பார்வதி கூட இருந்த சிவன இவனோட தவம் டிஸ்டர்ப் பண்ண,  சிவன் பார்வதிய பாத்து சொல்றான் "இவனுக்கு இதே வேலையா போச்சி, எந்த நேரத்துல தவம் பண்ணி கூப்புடணுமுன்னு தெரியாமாட்டிக்கு. இந்த நாயி ஏதோ குச்சிக்குத்தான் இந்தவேலைய பாத்துட்டு திரியுது. நான் அவன்கிட்ட என்னோட திருவிளையாடல கொஞ்சம் காட்டிட்டு வாரேன்"னு சிவன் ஒரு பன்னிபுடிக்குறவன் வேசம் போட்டு வாரான்.

அர்ஜுனன் தவத்துல இருக்க, சிவன் வீம்புக்குனு சண்டைக்கு போறான். ரெண்டு பேருக்கும் சண்ட நடக்கும் போது அர்ஜுனன்ட்ட இருந்த வில்லயும், அம்பு குச்சியயும் புடிகிக்கிட்டு, போடா னு விரட்டுறான். அர்ஜுனன் சோர்ந்து போயிருக்க, சிவனும் பார்வதியும் அர்ஜுனன் முன்னால தன்னோட ஒரிஜினல் கெட்டப்ல வந்து நிக்கான் "டே.. அர்ஜுனா.. நான்தான்டா சிவன்"னு சொட்டயன் ஸ்டைல்ல சொல்லி "உன்ன சும்மா கலாய்க்கிறதுக்கு நான் பண்ணுன திருவிளையாடல்..  உனக்கு என்ன வேணும் கேளு.. நான் தாறேன்."னு சொல்றான்.

அதுக்கு அர்ஜுனன் "என்னோட வில்லுக்கு ரெம்ப பவர்புல்லான அம்பு குச்சிக வேணும், அத வச்சி நான் கர்ணன் நெஞ்சில ஓட்டைய போட்டு கொல்லனும்"னு சொல்றான். அதுக்கு சிவன் "சரிடா.. அப்பிடியே ஆகட்டும், நீ போகுற போக்குல இந்திரனை போயி பாரு."னு சொல்லிட்டு அவனோட வில்லயும் குச்சிகலயும் திரும்ப கொடுத்துட்டு மறஞ்சிருறான்.

அந்தசமயம் அர்ஜுனன் பவரான குச்சியோடா வருவான் னு வெய்ட் பண்ணுன பாண்டவங்களும், பாஞ்சாலியும் அந்த இடத்தவிட்டு இமயமலை சைடு போறாங்க. அங்க ஒரு டெண்ட போட்டு தங்குறாங்க. இமயமலைக்கு அடி பகுதில இருக்குறதால.. நல்ல கிளைமேட், சாரக் காத்து, எங்க பாத்தாலும் பசேல் னு இருக்கு, காத்துல சாமந்தி பூ வாசம் வருது. இதையெல்லாம் கண்ணாமூடி ரசிச்சிக்கிட்டு கேடந்த பாஞ்சாலி பீமன கூப்பிட்டு "என்னங்க.. சாமந்தி பூ வாசம் எங்கயிருந்தோ காத்துல வருது.. எனக்காக அந்த பூவயெல்லாம் பரிச்சிட்டு வாரிகளா"னு கேக்குறா. அது பீமன் "கொஞ்சம் வெய்ட் பண்ணுடி, மாமன் பூவோட வாரேன்"னு சொல்லிட்டு பூவத் தேடி ஒரு மலைக்கு போயிருக்கான்.

அங்க குரங்குமாதிரி இருக்குற ஒரு மனுச பாக்கான். மனுசன் குரங்க போட்டு, குரங்குக்கு குந்தை பிறந்த எப்பிடி இருக்குமோ...! அச்சு அசல் அப்பிடியே இருக்கான். அவன் பேரு 'அனுமன்'. இந்த குரங்கு பயகிட்ட பீமன் அவனோட எல்லா பிளாஷ்பேக் கதையும் சொல்றான்.அதுக்கு அந்த குரங்குப்பய "கவலை படாத பீமா. எங்க அப்பன் வாயுதேவன் உங்ம்மா குந்திய பாத்துவிட்டதுல தான், நீயும் போறந்துருக்க. ஒருவிதத்துல நீயும் எனக்கு தம்பி முறைதான் வேணும். நான் நேரடியா உனக்கு ஹெல்ப் பண்ணாட்டியும், நீ கௌரவர்கள செயிக்க மறைமுகமா ஹெல்ப் பன்றேன். இந்தா.. இந்த பூவ தேடித்தானே வந்த...? இந்த சாமந்தி பூவ நான் குடுத்தேன் னு சொல்லி உன் பொண்டாட்டி பாஞ்சாலிட்ட கொடு"னு பூவ குடுத்து அனுமாரு பீமன அனுப்பி வைக்கிறான்.

- தொடரும்..

No comments:

Post a Comment