Tuesday, July 31, 2018

பகுதி 26 - பாண்டவர்கள் போட்ட வேசம் - முதல் போர் ஆரம்பம் - இதுதான்...மகாபாரத...கதை

குச்சிக வாங்க போனா அர்ஜுனனும் திரும்ப பாண்டவங்ககிட்ட வந்துட்டான். 12 வருஷம் வனவாசம் முடிஞ்சி இப்ப 13வது வருசம் போயிட்டு இருக்கு. தர்மன், எல்லோரையும் கூப்பிட்டு "தம்பிகளா.. இப்ப நமக்கு வனவாசம் 13வது வருசம் போயிட்டு இருக்கு. இந்த டயம் நாம துரியோதனன் கண்ணுல பட்டா.. அந்த பீஷ்மர் கிழவன் திரும்பவும் 14 வருசம் வனவாசம் அனுப்பிருவான். அதனால நாம யாருக்கும் தெரியாம இந்த வருசத்த ஓட்டிட்டோமுனா... அடுத்து நாம துரியோதனன் கூட சண்ட போட்டு செயிசிட்டு, நம்ம நாட்டுல சந்தோசமா இருக்கலாம்"னு சொல்றான். பாண்டவங்க எல்லோரும் எங்க தலைமரவா இருக்குறதுன்னு யோச்சிட்டு கிடக்கானுக.

அந்தசமயம் ஒரு மான்குட்டி ஒரு ஐயர் வீட்டுல இருக்குற விறகுக்கட்ட மேல அதோட முதுக தேச்சிக்கிட்டிருக்கு.. இத பாத்த ஐயரு அத விரட்டுறான். மானு ஓடும்போது ஒரு விறகுக்குச்சி மானோட கொம்புல மாட்டிக்ககிறது. உடனே அந்த ஐயர் "மானு என்னோட விறகு கட்டய தூக்கிட்டு போயிருச்சி"னு கூப்பாடு போடுறான்.

அப்றம் ஐயர் பாண்டவங்ககிட்ட போயி "பாண்டவங்களா... நான் ஓமகுண்டம் வளக்க சேத்து வச்ச விரக ஒரு மானு தூக்கிட்டு போயிருச்சி"னு ரிப்போர்ட் பன்ரான். இது தப்பச்சே னு பாண்டவங்க "எங்க அந்த மானு"னு கேக்குறாங்க. அதுக்கு அந்த ஐயரு "அது கிழக்க பாத்து ஓடுது"னு சொல்ல, பாண்டவங்க அந்த மான தேடி போராணுக. ரெம்ப தூரம் போயிம் மானு கெடைக்கல. எல்லாம் சோந்து போயி ஒரு ஆலமர்த்துக்கு அடில உக்காருராணுக.

அப்போ தர்மன் நகுலன பாத்து "தம்பி.. இங்க எங்கயாவது தண்ணி கிடைக்குமா னு அந்த மரத்துல ஏரி பாருடா"னு சொல்றான்.

நகுலனும் மரத்துமேல ஏறி பாக்கான். அந்த மரத்துக்கு வடக்கு பக்கமா ஒரு கொக்கு கூட்டம் வட்டம் போட்டு சுத்திட்டு கெடக்க. அங்கதான் தண்ணி இருக்கும் னு அண்ணன் தர்மண்ட்ட சொல்லிட்டு தண்ணி கொண்டு வர போறான். அங்க போயி பாத்தா ஒரு பெரிய கம்மா இருக்கு. அதுல இறங்கி தண்ணிய குடிச்சிட்டு, ஒரு கென்ல தண்ணி மோக்கான்.

அந்தபக்கமா ஒரு அசரரீ கேக்கு... "இது என்னோட கம்மாய்.. இங்க தண்ணி எடுக்கணுமுனா, நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்"னு சொல்லுது. அத காதுல வாங்காம கென்ல தண்ணிய எடுத்துட்டு கரைக்கு வரான். கரையிலயே மயங்கி விழுந்து செத்து போறான்.

தண்ணி எடுக்க போனவன் ஏன் இன்னும் வரலனு தர்மன் "அவன் என்ன பண்ணராணு பாத்துட்டு வாடா"னு சகாதேவன அனுப்புறான்.

அவனும் அந்த அசரீரிய காதுல கேக்காம தண்ணிய குடிச்சி செத்துருறான். அடுத்து இவனுகல தேடி வந்த அர்ஜுனனும் அதே மாதிரி செத்துருறான். அப்பறம் பீமனும் அதே மாதிரி செத்துருறான்.

என்னடா.. போனவங்க எவனையும் காணோம் னு தர்மன் போறான். அதே ஒரு அசரீரி கேக்கு.. அது என்ன கேள்வி னு தர்மன் கேக்க, அந்த அசரீரி சொல்லுது, அதுக்கு சரியான விடைய சொல்ல. அந்த அசரீரி, செத்த எல்லாத்தையும் உயிரோட வரவச்சி, தண்ணியும் கொடுத்து வழியனுப்பி வைச்சிருக்கு..

மறுபடியும் ஆலமரத்தடில உக்காந்து 13வது வருச வனவாசத்த எங்க போயி பாதுகாப்பா கழிக்கலாமுன்னு பிளான் போடுறாங்க. அப்போ தர்மன் சொல்றான் "டே.. தம்பிகளா நாம் எல்லாம் பாதுகாப்பா இருக்க. விராடராஜனோட மத்தியபிரதேசம் தான். அந்த அரசன் துரியோதனனுக்கு எதிரி, அதனால நாம இருக்குற இடம் துரியோதனனுக்கு தெரியாது" சொல்றான். அதுக்கு பாஞ்சாலி "அவங்க அரண்மனைல நாம எப்பிடி இருக்குறது.?"னு கேக்குறா..

அதுக்கு தர்மன் "நான் அந்த அரசனுக்கு விசிறி வீசுர ஜாப்ல சேருறேன்"னு சொல்றான்.

பீமன் "நான் அந்த அரண்மனையில சமையல் வேலைக்கு சேருறேன்."னு சொல்றான்.

அர்ஜுனன் "நான் திருநங்கையா வேசம் போட்டு அரசனுக்கு பணிவிடை செய்யுறேன்"னு சொல்றான்.

நகுலன் ''நான் அரண்மனைல இருக்குற குதிரைய பலக்குறவனா, வேலைக்கு சேருறேன்."னு சொல்றான்.

சகாதேவன் "நான் அங்க மாடு மேய்க்குறேன்"னு சொல்றான்.

பாண்டவங்க எல்லாம் நீ என்ன வேசம் போட போற னு பாஞ்சாலிய கேட்டதுக்கு, பாஞ்சாலி "நான் அந்தபுரத்து பெண் தோழியா அரசனுக்கு பணிவிடை செய்றேன்"னு சொல்றா.

எல்லோரும் விராடராஜா அரண்மனைல ஒவ்வொரு வேலைல சேருறாங்க.

பாஞ்சாலி எப்போவும் விராடன் பொண்ட்டாடி சுதேசனை கூடவே துணையா இருக்கா. விராடனோட தம்பி  சீசகனுக்கு பாஞ்சாலிய ரெம்ப புடிச்சி போயிருது. "இவள ஒரு தடவையாவது மாட்டார பாத்துறனும்" னு சீசகன் அவன் அண்ணன் பொண்டாட்டிகிட்ட இது சம்பந்தமா பேச போறான் "அண்ணி... உங்க தோழி எனக்கு ரெம்ப புடிச்சிபோச்சி. ஒரே நாள் மட்டும் என் ரூம்க்கு அனுப்பி வைங்க"னு சொல்றான்.

அவனோட அண்ணியும் சரி னு சொல்லிட்டு பாஞ்சாலிட்ட பேசி ஒத்துக்க வைக்குறா. பாஞ்சாலியும் சீசகன் ரூம்க்கு போறா. இந்த மேட்டர் பீமனுக்கு தெரிஞ்சி போக, சீசகன் ரூம்க்கு போயி சீசகன் கூட சண்டைய போட்டு கொண்ணுருறான்.

இந்த விசயம் விராடன் அரசனுக்கு தெரிய, அரசன் பாஞ்சாலிட்ட வந்து "நீதானே என்னோட தம்பி ரூம்ல இருந்த, அவன் எப்பிடி செத்தான்.. எவண்டி கொன்னான்"னு மிரட்டி கேக்கான். அதுக்கு பாஞ்சாலி "என்னோட புருசன், ஒரு தெய்வ சக்தி இருக்குரவன். என்னோட உடம்ப உன் தம்பி தொட்டதும், என் புருசன் வந்து உன் தம்பிய கொன்னுட்டு மறைஞ்சீட்டான்"னு சொல்றா. அரசனும் இவ சொல்றத நம்பிட்டான்.

சீசகன் செத்த நியூஸ் எல்லாம் நாட்டுக்கும் பரவுது. துரியோதனனும் இத கேள்விபடுறேன். "சீசகன் ரெம்பா பலமானவன். அவன கொல்லணுமுன்னா அது பீமனால தான் முடியும். அப்ப அவன் மத்தியபிரதேசத்துல தான் இருக்கான்" கர்ணன்ட்ட சொல்விட்டு,

உடனே எல்லோரும் விராடன் மன்னன் கூட போருக்கு போறப்படுங்க னு எல்லா படையையும்  கூட்டிகிட்டு போருக்கு போறான். போர் செய்தி கேட்ட விராடன் மன்னனும் போருக்கு போறான். ரெண்டு நாட்டுக்கும் சண்ட நடக்கு விராடனால போர சமாளிக்க முடியல. அப்போ விராடன் மகன் ஒரு படையோட போர் செய்ய வரான். அவனோட தேர அரவாணி வேசம் போட்டு அர்ஜுனன் ஓட்டிட்டு வரான்.

துரியோதனன் சைடு பீஷ்மர், துரோணர், கர்ணன் இருக்காங்க. விராடன் சைடு அவன் மகன் மட்டும் இருக்கான். போர்ல தோக்குற நிலைமல இருக்காங்க. அந்த நேரம் அர்ஜுனன் தன்னோட வேசத்த கழிச்சி, சிவன்ட்ட வாங்கிட்டு வந்த குச்சிய வில்லுல வச்சி வீச் வீச் னு விடுறான். துரியோதனன் படைகல பாதி பேரு செத்துருராணுக. விராடன் அர்ஜுனன கட்டிபுடிச்சி "யாரு ராசா நீ ?"னு கேக்குறான். அதுக்கு அர்ஜுனன் அவனோட பிளாஸ்பேக் சொல்லுறான். அப்பறம் பாண்டவங்க எல்லாம் வந்து போர்ல குதிக்காங்க. பீமன் ஒத்த கைய வச்சி அந்தா அடி அடிக்குறான்.

பயந்து போன துரியோதனன் பீஷ்மர கூப்புடுறான். பீஷ்மர் அர்ஜுனன் மேல அம்பு வச்சி வீச் வீச்சுனு விடுறான். எல்லாம் மிஸ் ஆகுது. கௌரவங்க தோத்து நாட்டுக்கு திரும்பி போயிருராணுக.

- தொடரும்...

குறிப்பு :-
         ( கதை புரியாத மாதிரி இருந்தா கேள்வி கேளுங்க நண்பர்களே...)

No comments:

Post a Comment