Tuesday, July 31, 2018

காஷ்மீன் கடைசி மன்னன் ஹரிசிங் - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் - தொடர் 6

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்பந்தம் போட்ட கடைசி டோக்ரா மன்னனான ஹரிசிங் ஒரு பெண் பித்தன்.

நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் வீச்சுடன் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் அடிக்கடி பாரிசுக்கும் லண்டனுக்கும் சென்று கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

வெள்ளை விலைமாதர்களைத் தேடி ஐரோப்பாவுக்கு அலைந்ததுதான் மாட்சிமை தாங்கிய மன்னரின் நிர்வாக நடவடிக்கையாக இருந்திருக்கிறது.

1921-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு விலைமாதுவுக்கு 1.50 லட்சம் பவுண்டுக்கு காசோலை கொடுத்து வில்லங்கத்தில் சிக்கி போலீசில் மாட்டிக் கொண்டார் ஹரிசிங்.

நீதிமன்றத்தில் ஹரிசிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தன் கட்சிக்காரரைப் பற்றிச் சொல்லும்போது, அவர் ஒரு ஏழை துர்ப்பாக்கியசாலி என்றும் அவர்மீது கருணை வைத்து விடுவித்து விடுமாறும் கோரினாராம்.
ஹரிசிங் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத தந்தக் கோபுர வாசி.

அவனை சுற்றியிருந்தவர்கள் அனைவரும் துதிபாடிகள். மன்னர் அடிக்கடி ஐரோப்பாவுக்கு போய்விடுவான். ஆகையால், பண்டிட், டோக்ரா அதிகாரிகள் குடிமக்களான இசுலாமிய மக்களை விரும்பியபடியெல்லாம் சுரண்டியிருக்கின்றனர்.

தொடரும்...

No comments:

Post a Comment