Tuesday, July 31, 2018

இறுதி பகுதி 30 - பீஷ்மர் வனவாசம் - கிருஷ்ணன் இறப்பு - துரியோதனனுக்கு கிடைத்த சொர்க்கம் - இதுதான்...மகாபாரத...கதை..

போர் முடிஞ்சி பாண்டவங்க செயிட்டாங்க. கிருஷ்ணனும் துவராகைக்கு கெளம்பிட்டான். பாண்டவங்க பாஞ்சாலிட்ட போறாங்க. பாஞ்சாலி ரெம்ப கோவமா இருக்கா. பாண்டவங்கல பாத்து "போர்ல
என்னோட மகங்க அஞ்சி பேரையும் அஸ்வத்தாமன் கொன்னுட்டான். நீங்க அஞ்சி பேரும் சரியான அம்பளனா அவன கொன்னுட்டு வாங்கடா.."னு சொல்றா. பாண்டவங்க அஸ்வத்தாமன வலைவீசி தேடுறாங்க. அஸ்வத்தாமன் வியாசர்முனிவன் பின்னாடி ஒழிஞ்சிகிட்டான்.

இத தெரிஞ்ச பாண்டவங்க அஸ்வத்தாமன போடப்போறாங்க. கோவமா வந்த பாண்டவங்கல பாத்து "உங்க மகன போட்டேன்ங்கிற கோவத்துல தானே என்ன போட வாறீங்க. உங்க மகன்கள கொன்னதுக்கு பிராசித்தமா நானே பாஞ்சலிக்கு ஒரு குழந்தைய கொடுக்குறேன்"னு சொல்லிட்டு, ஒரு மந்தரத்த போட்டு பாஞ்சாலிக்கும் அபிமன்யூ பொண்டாட்டி பரிச்சித்துக்கும் ஒரு குழந்தைய குடுக்கான். இவனுகளும் கோவம் தனிஞ்சி திரும்பி போயிருராணுக.

போர்ல நூர் மகன்கள பறிகொடுத்த திருதராஷ்டிரன் சோகமா இருக்கான். அந்த நேரம் பாண்டவங்க திருதராஷ்டிரன பாத்து "இனி நீங்க தான் எங்களுக்கு அரசரா இருந்து வழிகாட்டனும்"னு சொல்றாங்க. அதுக்கு திருதராஷ்டிரன் "சரிடா.. எல்லோரும் இந்த சம்பவத்த மறந்து சந்தோசமா இருப்போம்.. என்னோட நூறு பசங்கள கொன்ன பீமன கூப்புடு நான் தடவி பாக்கணும்"னு சொல்றான்.  இந்த  கிழவன் எப்பிடியும் கோவத்துல தான் இருப்பான் னு சொல்லிட்டு பீமனுக்கு பதிலா ஒரு இரும்பு குரங்கு பொம்மையை எதுக்க நிப்பாட்டுராணுக. அத கட்டிபுடிச்ச திருதராஷ்டிரன், அத சுக்குநூறா ஒடச்சிருறான்.

"ஏன் இந்த கொலவெறி"னு பாண்டவங்க கேக்க , அதுக்கு திருதராஷ்டிரன் "எனக்கு புள்ள  இல்லாம பண்ணிட்டீங்கடா. நானும் என் பொண்டாட்டி காந்தாரியும் வனவாசம் போறோம்"னு கூட குந்திய துணைக்கு கூப்பிட்டுகிட்டு ஒருத்தர் மேல ஒருத்தர் கைவச்சி நடந்துபோறாங்க.

தர்மன் 'ரெம்ப பெரிய தப்பு பண்ணிட்டோம்'னு சோகமாவே இருக்கான். அதேசமயம் கிருஷ்ணன் துவராகைல நாட்டுமக்களான யாதவ பயபுல்லக.. சரக்க போட்டு ஒரு முனிவன்ட்ட வம்பிலுத்துருக்கானுக, அதுக்கு அந்த முனிவர் "சரகடிச்சா அமைதியா வீட்டுல போயி தூங்குங்கடா.. இல்ல சாபம் விட்டுருவன்"னு மிரட்டிருக்காப்பில. அதுக்கு யாதவ பயங்க, ஒரு ஆம்பள பயலுக்கு பொம்பள வேசம் போட்டு முனிவர்ட்ட கூட்டிவந்து "இந்த பொண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் முனிவரே"னு கேட்டுருக்காங்க. "அதுக்கு அந்த முனிவர் இவளுக்கு உலக்கதான் பிறக்கும், அதாலதான் நீங்க அடிச்சிக்கிட்டு சாகபோறீங்கடா"னு சாபம் விட்டான்.

கொஞ்சநாளுக்கு பிறகு பொம்பள வேசம் போட்டவனுக்கு ஒரு உலக்கை பிறக்கு. இத பாத்த ஊரு பயலுக உலக்க இருந்தா முனிவர் சொன்ன மாதிரி ஆயிரும் னு அந்த உலக்கய தூக்கி கொண்டுபோயி எறிச்சிருராணுக. ஊருக்குள்ள அடிக்கடி பாண்டவங்க குரூப்ல போர் செஞ்சவங்களுக்கும், கௌரவர் குரூப்ல போர் செஞ்சவங்களுக்கும் சண்ட வருது. அந்த உலக்கய எரிச்ச இடத்துல கோரப்புல்லு மாதிரி ரெம்ப உலக்க முலைச்சி நீட்டிக்கிட்டு நிக்குது,

இத பாத்த ரெண்டு குரூப்பும் அத புடுங்கி ஒருத்தன ஒருத்தன மாத்தி மாத்தி அடிச்சி செத்துப்போராணுக. கிருஷ்ணனோட நாடே அழிஞ்சிருது. இத பாத்த பலராமன் அப்பிடியே தவம் பண்ணுன மாதிரியே உக்காந்து செத்துப்போறான். நாட்டுல எல்லாம் செத்த சோகத்துல கிருஷ்ணன் காட்டுக்குள்ள ஒரு மரத்து அடில படுத்துக்கிடாக்கான். காட்டுக்கு வந்த வேட்டைக்காரன் ஒருத்தன், கிருஷ்ணன பாத்து மானு னு நினைச்சி அம்பு விடுறான். வேட்டையன் விட்ட அம்புல கிருஷ்ணன் செத்துப்போறான்.

திருதராஷ்டிரன் காட்டுல வனவாசம் போகும்போது, காட்டெல்லம் தீ பிடிச்சி எரியுது. இத பாத்த திருதராஷ்டிரன், காந்தாரியயும், குந்தியயும் தப்பிக்கவச்சிட்டு தீல விழுந்து செத்துருரான்.

பாண்டவங்க ஒரு 30 வருசம் ஆட்சி செஞ்சிட்டு, அபிமன்யூ மகனுக்கு அரசனா முடிசூட்டிட்டு, பாண்டவகளும், பாஞ்சாலியும் வனவாசம் போறாங்க. இமயமலை சைடு போகும்போதே ஒவ்வொருத்தனா கீழ 'தொப்பு தொப்பு'னு விழுந்து செத்துருறானுக. பாஞ்சாலியும் செத்துபோயிருறா. தர்மன் மட்டும் ஒரு நாயி கூட நடந்துட்டே இருக்கான். இந்திரன் இடைல வந்து "தர்மா.. உன்னோட தம்பிக பாஞ்சாலி எல்லாம் செத்துட்டாங்க. நீ என்னோட சொக்கத்துக்கு வா.."னு கூப்பிட்டு சொர்க்கத்துக்கு போறான்.

சொர்க்கத்தில தர்மன் துரியோதனன பாக்கான். துரியோதனன் கையில சரக்கு பாட்டுல வச்சிக்கிட்டு அஞ்சி பொண்ணுங்க  கூட ஜாலியா இருக்கான். இத பாத்து கோவமான தர்மன் "என்னயா.. இது இங்க நியாயம் செத்துபோச்சா...? துரியோதனன் சொக்கத்துல ஜாலியா இருக்கான்"னு கேக்குறான்.

அதுக்கு அந்த பக்கமா வந்த நாரதர் தர்மன பாத்து "தர்மா.. இது சொர்க்கம். துரியோதனன் சுத்தமான வீரன். அதனால அவனுக்கு சொர்க்கம் கிடைச்சிருக்கு"னு சொல்றான். அதுக்கு தர்மன் "அப்போ என் தம்பிக, பாஞ்சாலி எங்க இருக்காங்க"னு கேக்கான். அதுக்கு நாரதர், வா காட்டுறேன் னு கூட்டி போயி நரகத்த காட்டுறான்.

அத பாத்து இன்னும் கோவமான தர்மன் "என்னய்யா... இது.? ரெம்ப அநியாயமா இருக்கு. துரியோதனன் ஜாலியா இருக்கான். பாண்டவங்கலும் பாஞ்சாலியும் பயித்தியமா அலையுராணுக. நானும் என் தம்பிக கூடயே இருந்துகிறேன். நீ போயி இந்திரன்ட்ட சொல்லிரு.."னு சொல்றான்.

அந்த டயம் இந்திரன் வந்து "இவங்களுக்கும் சொர்க்கத்தில இடம் இருக்கு. இதெல்லாம் சும்மா உன்ன கடுப்பேத்த நான் பண்ணுனேன்" னு சொல்லிட்டு, எல்லாத்தயும் சொர்க்கத்துக்கு போக சொல்லிட்டான்.

சொக்கத்துல பாண்டவர்களும் கௌரவங்களும் சந்தோசமா, ஒத்துமையா வழுறாணுக..

                           *****முடிஞ்சிச்சி******

                              🙏🙏🙏🙏🙏

                                      நன்றி
                        மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment