Tuesday, July 31, 2018

பகுதி 8 - காந்தாரி கல்யாணம் - குருடனுக்கு வந்த வாழ்வு - இதுதான்.. மகாபாரத.. கதை

பீஷ்மர் தன்னோட சகோதரன் விசித்திரவீரியனின் வாரிசுகளான திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் னு மூணுபேத்தையும் நல்ல படியா வளக்குறான். திருதராஷ்டிரன் மூத்தவன். ஆனா அவனுக்கு கண்ணு தெரியாது. ஆதனால பாண்டு, விதுரன் இந்த ரெண்டுபேருக்கும் போர் பயிற்சி, கலை, கல்வி னு, தான் கத்துகிட்ட மொத்த வித்தையயும், தம்பி மகன்களுக்கு கத்துத்தாரான்.

தம்பி மகன்க மூணு பேரும் பெரியவங்களா ஆயிட்டானுக. பீஷ்மர் மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண ரெடி பன்றான்.

அந்த சமயத்தில பக்கத்து நாடான காந்தாரநாட்டு இளவரசியான காந்தாரி அழகு, பெருமைய பத்தி பீஷ்மர் அரசபைல அமைச்சர்ங்க எல்லாம் பீஷ்மர்ட்ட எடுத்து சொல்றானுக. பீஷ்மரும் சரி னு, பாஸ்ட் மூத்தவனான திருதராஷ்டிரனுக்கு கல்யாணத்த முடிச்சி வைபோனு காந்தாரநாட்டு மன்னங்கிட்ட பொண்ணு கேட்டு போறான்.

காந்தார நாட்டு மன்னன் முடியாது சொல்றான். ஏன் னு பீஷ்மர் கேட்க. "திருதராஷ்டிரனுக்கு பார்வ தெரியாது. அவனுக்கு எங்க நாட்டு இளவரசிய கொடுக்க முடியாது பீஷ்மா"னு சொல்றான். அப்பறம் நீண்ட விவாதத்துக்கு பிறகு அஸ்தினாபுரம் உறவு விட்டு போயிட கூடாது னு காந்தாரநாட்டு மன்னன் கல்யாணத்துக்கு சரி னு சொல்லிட்டான்.

காந்தாரி செம அழகி. ஒரு குருடன கட்டிக்க போறமே னு கவலையும் பாடல. அவளும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா.

திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. தன்னோட புருசன் குருடனா இருக்கும் போது எனக்கு மட்டும் பார்வ எதுக்கு னு, காந்தாரி தன்னோட வாழ்நாள் முழுவதும் கண்ண கட்டி புருசன மாதிரி பார்வையில்லாம வாளனும் னு சத்தியம் செஞ்சி ரெண்டு கண்ணையும் கருப்பு துணியால கட்டிக்கிட்டா.

காந்தாரி பண்ணுன இந்த செயல பாத்து அஸ்தினாபுரமே அவள பாராட்டுனாங்க. இத கேள்விப்பட்ட பீஷ்மருக்கும் ரெம்ப சந்தோசமா இருந்துச்சி. அதே சந்தோசத்துல காந்தாரி தங்கச்சிங்க பத்து பேத்தயும் "அக்காவுக்கும், மச்சானுக்கும் துணையாக இருக்கட்டும்"னு  திருதராஷ்டிரனுக்கே கட்டிவச்சிட்டான்.

திருதராஷ்டிரன் வாழ்க்கை செமையா போயிட்டு இருந்துச்சி...

- தொடரும்....

No comments:

Post a Comment