Wednesday, July 25, 2018

இந்துமத சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதிவிரதையாக (பத்தினி) அய்ந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது..

இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி இவர்களை நினைத்தால் புண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது.

பெண் தெய்வங்கள் என்று கூறிக்கொண்டு இந்த பார்ப்பினர்கள் ஆண் கடவுள்களால் கற்பழிக்கப்பட்டதாகவும், புருஷன் கடவுள் பத்தாதென்று வேறொருவருடன் திரட்டு உறவு வைத்துக்கொண்டதாகவும் புராணங்களை எழுதியுள்ளனர்.

பெண் கடவுள்களுக்கே இந்த சோதனை என்றால் அக்கால பெண்களின் நிலை என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

இவர்கள் புராணத்தில் இந்த ஐந்து பேரும் முதல் நம்பர் விபசாரிகள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் அல்ல, அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான்.

அகல்யை: இவள் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான்.

தாரை : இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னுடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான்.

துரோபதை : இவளுக்கு தனி பதிவே போட்டுருக்கிறேன் . இவள் அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தவள், அதுவும் பற்றாமல் ஆறாம் பேர்வழியாக கர்ணன் மீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது.

அடுத்து சீதை: இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால், அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததனால், அவள் விரும்பியே அவன் பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக் கொண்டு வந்த பின் இவள் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக் கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள்.

இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் இந்து பதிவிரதைகளாக (பத்தினி) - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதுபோன்ற காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம் காணலாம்..

No comments:

Post a Comment